ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை 6 விதமான வேரியண்டடை பெற்று ஆன்ரோடு விலை ரூ.19.21 லட்சம் முதல் ரூ.24.99 லட்சம் வரை அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல் பின்வருமாறு;-
க்ரெட்டா எலெக்ட்ரிக் விலை | ||
---|---|---|
வகை | Price(ex-showroom) | Price(on-road) |
Executive | Rs 17,99,000 | Rs 19,21,432 |
Smart | Rs 18,99,900 | Rs 20,28,543 |
Smart (O) | Rs 19,49,900 | Rs 20,80,014 |
Premium | Rs 19,99,900 | Rs 21,31,689 |
Smart (O) 51.4Kwh LR | Rs 21,49,900 | Rs 22,89,543 |
Excellence 51.4Kwh LR | Rs 23,49,900 | Rs 24,98,897 |
இதில் டூயல் டோன் அல்லது மேட் நிறங்களை தேர்ந்தெடுத்தால் ரூ.15,000 வரை கூடுதலாக கட்டணம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வசூலிக்கப்படுகின்றது. இந்த வேரியண்ட் வரிசையில் உள்ள Smart (O), Premium மற்றும் Excellence என மூன்றுக்கும் 11kW AC வால் சார்ஜருக்கு மற்றும் பொருத்துவதற்கான கட்டணத்தை சேரத்து ரூ.73,000 கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரம்
க்ரெட்டா எலக்ட்ரிக் காரில் 42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 390 கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து, 51.4 kWh பேட்டரி கொண்ட டாப் மாடல் அதிகபட்சமாக 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 473 கிமீ வழங்கும் என ARAI உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், அனைத்து வீலிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC), வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை (VSM) உடன் மின்னணு நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு (ESC) , குழந்தை இருக்கை நங்கூரம் (ISOFIX), டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு போன்றவை உள்ளது.
டாப் வேரியண்டில் லெவல் 2 ADAS மூலம் பெறப்படும் வசதிகளில் 19 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் மஹிந்திரா BE 6, டாடா கர்வ் இவி, எம்ஜி இசட்எஸ் இவி வரவிருக்கும் மாருதி சுசூகி இ விட்டாரா, டொயோட்டா அர்பன் இவி ஆகியவை கிடைக்கின்றது.