ரூபாய் 9.95 லட்சம் விலையில் ஹோண்டா WR-V காரில் புதிதாக V வேரியண்ட் டீசல் என்ஜின் பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மற்ற வேரியண்டுகளில் சிறிய மேம்பாடுகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்படுகின்ற S மற்றும் VX வேரியண்டுகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா WR-V காரின் புதிய V மாறுபாடு ஹெட்லேம்ப் உடன் இணைந்த எல்இடி ரன்னிங் விளக்குகள், பனி விளக்குகள், ஓ.ஆர்.வி.எம்-இல் டர்ன் இன்டிகேட்டர்கள், கன் மெட்டல் பூச்சு பெற்ற R16 மல்டி-ஸ்போக் அலாய் வீல், குரோம் கதவு கைப்பிடிகள் மற்றும் பின்புற மைக்ரோ ஆண்டெனா போன்ற பல வெளிப்புற வசதிகளை கொண்டதாக வருகிறது.
இந்த காரின் உட்புறத்தில், பிளாக் & சில்வர் நிறத்திலான அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ஏவிஎன் உடன் கூடிய 7.0 இன்ச் மேம்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், எச்எஃப்டி மற்றும் ஆடியோவுக்கான ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், குரல் வழி கட்டளை மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஏசி , ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், கீலெஸ் ரிமோட் கொண்ட ஹோண்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம், ஸ்டோரேஜ் கன்சோலுடன் முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் பவர் ஸ்டீயரிங் (இபிஎஸ்) போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.
89 பிஹெச்பி ஆற்றலுடன் 109 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்ப்பெற்றுள்ளது. பெட்ரோல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.5 கிமீ ஆகும்.
99 பிஹெச்பி ஆற்றலுடன் 200 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் WR-V மைலேஜ் ஒரு லிட்டருக்கு 25.5 கிமீ ஆகும்.
WR-V காரில் நிலையான பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம் (ஏபிஎஸ்), பின்புற பார்க்கிங் சென்சார், முன் பயணிகள் சீட் பெல்ட் நினைவூட்டல், ஸ்பீடு அலெர்ட், பாதசாரிகள் பாதுகாப்பிற்கான நுட்பம், பிரேக் ஓவர் ரைடு சிஸ்டம் மற்றும் மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா WR-V விலை பட்டியல்
1.2 petrol S ரூ. 8.15 லட்சம்
1.2 petrol VX ரூ. 9.25 லட்சம்
1.5 diesel S ரூ. 9.25 லட்சம்
1.5 diesel V ரூ. 9.95 லட்சம்
1.5 diesel VX ரூ. 10.35 லட்சம்
ex-showroom, Delhi