குளிர்கால இன்ஜின் பிரச்சினை காரணமாக சீனாவில் விற்பனை செய்யப்பட்ட அவன்சியர் ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்களை திருப்ப பெறுவதாக ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தாண்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த அவன்சியர் வாகனங்களை, ஹோண்டா நிறுவனம் உள்ளுரில் உள்ள இரண்டு நிறுவனங்களுடன் இணைந்தே விற்பனை செய்தது. இந்நிலையில், வாகனங்களை திரும்ப பெறுவதும் தொடர்பாக பேசிய ஹோண்டா நிறுவனம் இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு மாடல்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
அளவுக்கு அதிகமாக பெட்ரோல், இன்ஜின் லுபிரிக்கேன்ட் ஆயில் பேனில் விழும் பிரச்சினை காரணமாகவே இந்த வாகனங்கள் திரும்ப பெறப்படுகிறது. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வாகனங்களால் விபத்து எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டின் முற்பகுதியில், குளிர்ந்த கால இன்ஜின் பிரச்சினை காரணமாக ஹோண்டா நிறுவனத்தின் டோக்கியோ நிறுவனம் தலைமையகம், 1,30,000 வாகனங்களை திரும்ப பெற்றது.
தற்போது இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்து வருவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை காரணமாக, இந்த நிறுவனத்தின் விற்பனை 7.8 சதவிகிதம் குறைந்து, 1,05,960-ஆக இருந்தது.