மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எலிவேட் எஸ்யூவி காரின் உற்பத்தியை ராஜஸ்தான் தபுகாரா ஆலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் துவங்கியுள்ளது. தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது.
மிக கடும் போட்டியாளர்கள் நிறைந்த சி பிரிவில் வரவுள்ள எலிவேட் எஸ்யூவி காருக்கு சவால் விடுக்கும் மாடல்களாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவை உள்ளன.
Honda Elevate SUV Production
இந்தியாவில் தயாரிப்பதற்கான ஹோண்டாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், எலிவேட் காருக்கான உதிரிபாகங்கள் 90%க்கும் அதிகமான உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டகுயா சுமுரா பேசுகையில், “இந்தியாவில் உள்ள எங்களின் தபுகரா தொழிற்சாலையில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா எலிவேட் உற்பத்தியை நாங்கள் தொடங்குவதால், எங்களின் முயற்சியில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
எலிவேட் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எலிவேட்டின் உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடு என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் ஹோண்டா குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்களை ஈர்க்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.
மேலும் படிக்க – எலிவேட் எஸ்யூவி தொடர்பான விபரங்கள்