மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹோண்டா கார்ஸ் எலிவேட் எஸ்யூவி மாடலின் விலையை செப்டம்பர் 4 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. எலிவேட்டின் அனைத்து விபரங்களும் வெளியாக உள்ள நிலையில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
கடும் போட்டியாளர்களை பெற்றுள்ள சந்தையில் வரவுள்ள எலிவேட் காருக்கு ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவை உள்ளன.
2023 Honda Elevate SUV
எலிவேட் காரில் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.
எலிவேட் காரின் எரிபொருள் திறன் புள்ளிவிவரங்களை ஹோண்டா பகிர்ந்துள்ளபடி, மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.
வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்துக்குள் அமையலாம்.