இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்ட ரூ.17.70 விலையிலான சிவிக் காருக்கு அமோகமான முன்பதிவு நடைபெற்று வருகின்றது. கடந்த 45 நாட்களில் மட்டும் 2400 கார்களுக்கு இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
170 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா சிவிக் கார் சர்வதேச அளவில் 10 தொழிற்சாலைகளில் ஹோண்டா உற்பத்தி செய்து வருகின்றது. இதில் இந்தியாவின் ஹோண்டா ஆலையும் ஒன்றாகும்.
ஹோண்டாவின் சிவிக் காரின் சிறப்புகள்
7 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கார் இந்திய சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் சிவிக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. குறிப்பாக டீசல் என்ஜின் பெற்ற இந்த கார் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆலையாக நொய்டா விளங்குகின்றது.
மேலும் வாசிக்க ;- ஹோண்டா சிவிக் கார் விற்பனைக்கு வந்தது
மொத்த முன்பதிவு செய்யப்பட்ட கார்களில் 85 சதவீத கார்கள் பெட்ரோல் என்ஜினை பெற்ற மாடலாகும். இதுதவிர முன்பதில் 75 சதவீத கார்கள் டாப் ZX வேரியன்டை பெற்றுள்ளது.
சிவிக்கில் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 141 hp பவர் மற்றும் 174 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்திருக்கின்றது. பேடில் ஷிஃப்ட் வசதியும் இருக்கின்றது. 2019 சிவிக் காரின் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமசாக 120 hp பவர் மற்றும் 300 Nm டார்க் திறனையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வந்துள்ளது.
இந்தியாவில் சிவிக் காரின் விலை ரூ.17.70 லட்சம் முதல் 22.29 லட்சம் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.