Car News சிஆர்-வி, சிவிக் நீக்கம்.., ஹோண்டா நொய்டா ஆலை மூடல்..! Last updated: 24,December 2020 2:22 pm IST MR.Durai Share BS6 Honda Civicஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஆர்-வி மற்றும் சிவிக் என இரு மாடல்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள ஆலையை மூடப்படுகின்றது.CKD முறையில் அதாவது பாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கபட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சிவிக் மற்றும் சிஆர்-வி என இரு கார்களும் குறைந்த அளவில் இந்திய சந்தையில் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த நிலையில், கோவிட்-19 சூழல் போன்ற காரணங்களால் இந்த மாடல்களை விற்பனை செய்வதனை இந்நிறுவனம் கைவிட்டுள்ளது. சிட்டி கார் ஆரம்பத்தில் இங்கு தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது முழுவதும் ராஜஸ்தான் ஆலைக்கு மாற்றப்பட்டது. மேலும், உத்தரபிரதேசம் நொய்டாவில் அமைந்துள்ள ஆலையில் தயாரிக்கப்பட்ட இரு கார்களும் நீக்கப்பட்டுள்ளதால், ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனத்தின் ராஜஸ்தான் ஆலையில் தொடர்ந்து சிட்டி, அமேஸ், WR-V மற்றும் ஜாஸ் உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. நொய்டாவில் பயணிபுரிந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது ராஜஸ்தான் ஆலைக்கு மாறுவதற்கான வாய்ப்பினை ஹோண்டா வழங்கியுள்ளது. TAGGED:Honda CR-V Share This Article Facebook Previous Article ஜனவரி முதல் 5 % விலையை உயர்த்தும் நிசான் இந்தியா Next Article போலோ, வென்டோ கார்களின் விலையை உயர்த்தும் ஃபோக்ஸ்வேகன்