பிரசத்தி பெற்ற ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி செடான் காரில் உள்ள1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் பிஎஸ்6 மாசு உமிழ்வு முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலை விட பிஎஸ் 6 சிட்டி விலை ரூ. 9,000 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பிஎஸ்4 மாடலில் விற்பனைக்கு கிடைக்கின்ற டீசல் என்ஜின் காரின் சில வேரியண்டுகளின் விலையும் ரூ.5,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் மாதத்துக்கு முன்பாக பிஎஸ்6 நடைமுறைக்கு இந்த என்ஜினை மாற்ற ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனம், தனது முந்தைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது 10 வருட வாரண்டி அல்லது 1,20,000 கிமீ வரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சிட்டி, அமேஸ், சிவிக், ஜாஸ், டபிள்யூஆர்-வி, பிஆர்-வி, சிஆர்-வி, பிரியோ மற்றும் அக்கார்டு ஹைப்ரிட் உள்ளிட்ட வாகனங்களுடன் விற்பனை நிறுத்தப்பட்ட மொபிலியோ போன்ற மாடல்களுக்கும் வாரண்டி கிடைக்க உள்ளது.
மேலும் சிட்டி காரில் புதிய டிஜிபேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ப்ளூடூத் ஆதரவு மற்றும் வை-ஃபை இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி | Petrol (BS-6) | Diesel (BS-4) |
---|---|---|
SV MT | ரூ. 9.91 லட்சம் | ரூ. 11.11 லட்சம் |
V MT | ரூ. 10.66 லட்சம் | ரூ. 11.91 லட்சம் |
VX MT | ரூ. 11.82 லட்சம் | ரூ. 13.02 லட்சம் |
ZX MT | ரூ. 13.01 லட்சம் | ரூ. 14.21 லட்சம் |
V CVT | ரூ. 12.01 லட்சம் | |
VX CVT | ரூ. 13.12 லட்சம் | |
ZX CVT | ரூ. 14.31 லட்சம் |
(விலை பட்டியல் எக்ஸ்ஷோரூம் டெல்லி)