ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் எரிபொருள் பம்பில் (Fuel pump) ஏற்பட்டுள்ள கோளாறினை நீக்குவதற்காக சுமார் 90,468 வாகனங்களை திரும்ப அழைக்கின்றது. இந்த இந்த ரீ காலில் தற்பொழுது விற்பனை செய்யப்படாத மாடல்களான பிரியோ பிஆர்-வி டபிள்யூஆர்-வி ஜாஸ் போன்ற கார்களும் உள்ளன.
எரிபொருள் பம்பில் ஏற்பட்டுள்ள கோளாறினால் பம்ப் கோளாறு அடிக்கடி ஏற்படுவதுடன் என்ஜின் ஆன் செய்தாலும் சிரம்த்தை எதிர்கொள்வது அல்லது உடனடியாக ஆஃப் ஆகிவிடும்.
முன்பாக ஜூன் 2020-ல் நடத்தப்பட்ட இது போன்ற இந்த ரீகால் ஆனது, அதே எரிபொருள் பம்ப் கோளாறுக்கு 65,651 யூனிட்களை பாதித்திருந்தது. இந்த சமீபத்திய நீட்டிப்பு 90,468 புதிய யூனிட்களை உள்ளடக்கியது. மட்டுமல்லாமல், அக்கார்ட், அமேஸ், பிரியோ, BR-V, சிட்டி, சிவிக், ஜாஸ் மற்றும் WR-V போன்ற பல்வேறு மாடல்களில் ,2204 கூடுதல் வாகனங்களையும் உள்ளடக்கிய முன்பாக பழுதுபார்க்கப்பட்ட வாகனங்கள் கூட எரிபொருள் பம்ப் செயலிழப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யப்பட உள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பிரத்தியேக ரீகால் பக்கத்தில் காரின் 17-எழுத்துக்கள் கொண்ட வாகன அடையாள எண்ணை (VIN) உள்ளீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் இந்த திரும்ப அழைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கடந்த ஜூன் 2017 மற்றும் அக்டோபர் 2023க்கு இடையில் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்பிலிருந்து எரிபொருள் பம்பை , எந்த ஹோண்டா ஷோரூம் மூலமாகவும் தங்கள் வாகன நிலையைச் சரிபார்க்கலாம்.
வரும் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகின்ற ரீகால் சர்வீஸ், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஷிப்களில் பாதிக்கப்பட்ட பாகங்களை இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் டீலர்களிடம் இருந்து அழைப்பினை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.