ஹோண்டா கார்ஸ் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற செடான் ரக மாடலான சிட்டி மற்றும் அமேஸ் என இரண்டுக்கும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகின்றது.
சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலிவேட் எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்றுள்ளதால் சிறப்பான விற்பனை வளர்ச்சியை அக்டோபரில் பதிவு செய்துள்ளது.
Honda festive offers
அமேஸ் செடானுக்கு அதிகபட்சமாக ரூ. 67,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, ரூ. 25 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ.15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 3,000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 4,000 லாயல்டி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி என கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றது.
பிரசத்தி பெற்ற சிட்டி காருக்கு அதிகபட்சமாக ரூ.88,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது. ரூ. 25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 5,000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 4,000 லாயல்டி மற்றும் VX மற்றும் ZX வேரியண்டில் 5 வருட வாரண்டி பேக்கேஜ் ரூ.13,000 மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி என கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றது.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது மற்றும் மொத்த தள்ளுபடி மதிப்பு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.