கூடுதலான வசதிகளை பெற்றுள்ள ஹோண்டா அமேஸ் ப்ரிவிலேஜ் பதிப்பு சாதரன மாடலை விட கூடுதலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வெளிவந்துள்ளது.
அமேஸ் ப்ரிவிலேஜ்
2017 ஹோண்டா அமேஸ் ப்ரிவிலேஜ் காரானது S (O) MT வேரியன்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது, இதே வேரியன்டின் அடிப்படையில் இரண்டு எஞ்சின் ஆப்ஷனையும் பெற்றுள்ள இந்த சிறப்பு பதிப்பு சாதாரன வேரியண்டை விட ரூ.10,000 வரை விலை கூடுதலாக பெற்றுள்ளது.
அமேஸ் காரில் 88 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் 100hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இரு மாடல்களிலும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பெட்ரோல் சிவிடி உள்ள ஆப்ஷனில் ப்ரிவிலேஜ் பதிப்பு வெளியிடப்படவில்லை.
வசதிகள் விபரம்
தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் பாடி கிராபிக்ஸ் மற்றும் ப்ரிவிலேஜ் பதிப்பு பேட்ஜை மட்டுமே பெற்றுள்ளது. இன்டிரியர் அமைப்பில் குறிப்பிடதக்க அம்சமாக 7 அங்குல டிஜிபேட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் இணையம், ஸ்மார்ட்போன் ஆதரவு, 3D நேவிகேஷன் , 1.5 GB சேமிப்பு வசதி, வை-ஃபை சேவை போன்றவற்றை பெறலாம். மேலும் குரல் வழி உத்தரவுகள், புளூடூத் ஆக்ஸ் மற்றும் யூஎஸ்பி ஆகிய சேவைகளையும் பெறலாம்.
பிரிமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் இருக்கை உறைகள், ஓட்டுநருக்கான ஆர்ம்ரெஸ்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.
அமேஸ் ப்ரீவிலேஜ் விலை பட்டியல்
அமேஸ் பெட்ரோல் – ரூ.6.49 லட்சம்
அமேஸ் டீசல் – ரூ. 7.73 லட்சம்
விலை விபரம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)