பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் வசதிகளை பெற்ற ஹோண்டா WR-V மற்றும் ஹோண்டா அமேஸ் எக்ஸ்குளூசிவ் எடிசன் விற்பனை வெளியிடப்பட்டுள்ளது. VX வேரியண்டின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
விற்பனையில் உள்ள அமேஸ் VX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.
குறிப்பாக அமேஸ் காரின் எக்ஸ்குளூசிவ் எடிசனில் க்ரோம் பூச்சினை பெற்ற விண்டோஸ், பூட் லிட் மற்றும் பனி விளக்கு அறை உடன் எக்ஸ்குளூசிவ் பேட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளது. இன்டிரியரில் முன்புற இருக்கைகளுக்கு ஆரம் ரெஸ்ட், புதிய இருக்கை கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Honda Amaze Exclusive Edition Price
Petrol MT – ரூ. 7,96,000
Petrol CVT – ரூ. 8,79,000
Diesel MT – ரூ. 9,26,000
Diesel CVT – ரூ. 9,99,000
ஹோண்டா WR-V எக்ஸ்குளூசிவ் எடிசன்
WR-V காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் என்ஜின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு என்ஜின்களும் கிடைக்க உள்ளது.
இந்த மாடலிலும் அமேஸ் காரின் எக்ஸ்குளூசிவ் எடிசனை போலவே க்ரோம் பூச்சினை பெற்ற விண்டோஸ், பூட் லிட் மற்றும் பனி விளக்கு அறை உடன் எக்ஸ்குளூசிவ் பேட்ஜ் சேர்க்கப்பட்டு பக்கவாட்டில் பாடி கிராபிக்ஸ் கூடுதலாக வழங்கியுள்ளனர். இன்டிரியரில் புதிய இருக்கை கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Honda WR-V Exclusive Edition Price
Petrol MT – ரூ. 9,69,900
Diesel MT – ரூ. 10,99,900
Web title : Honda Amaze and WR-V Exclusive Editions launched