2019-ம் வருடம் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக மாடலான H5X கான்செப்ட் பெயருக்கு மாற்றாக டாடா ஹாரியர் (Harrier) எஸ்.யூ.வி என்ற பெயரை இந்நிறுவனம் சூட்டியுள்ளது. இதே பெயர் கொண்ட டொயோட்டா எஸ்யூவி பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடதக்கதாகும்.
முதன்முறையாக 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் பிளாட்பாரத்தை பின்பற்றி OMEGA பிளாட்பாரத்தில் H5X கான்செப்ட் என காட்சிப்படுத்தப்பட்ட மாடலுக்கு அதிகார்வப்பூர்வ விற்பனை பெயராக டாடா ஹேரியர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி 5 இருக்கை மற்றும் 7 இருக்கை என இருவிதமான மாறுபாட்டில் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 5 இருக்கை கொண்ட வேரியன்ட் முதற்கட்டமாக 2019 வருடத்தில் முதல் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து 7 இருக்கை கொண்ட எஸ்யூவி மாற்றுப் பெயருடன் அடுத்த வருட இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் டாடா நிறுவத்தின் இம்பேக்ட் டிசைன் ரக மாடல்களான டியாகோ, டீகோர் மற்றும் நெக்ஸான் மாடல்கள் அமோகமான ஆதரவை பெற்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பயணிகள் வாகன சந்தையில், அடுத்த நிலைக்கு எடுத்து சென்ற நிலையில், விற்பனை செய்யப்படுகின்ற நெக்ஸான் எஸ்யூவி மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டு விற்பனைக்கு வரவுள்ள ஹாரியர் அமோக ஆதரவை பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Optimal Modular Efficient Global Advanced (OMEGA) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு மோனோகூ பாடி கட்டமைப்பை கொண்டதாக விளங்க உள்ள ஹாரியர் இந்நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் வெர்ஷன் 2.0 வில் வரவுள்ள முதல் வாகனமாகும். லேண்ட்ரோவர் டி8 பிளாட்பாரத்தை கொண்டு வடிவமைக்கப்பட பிளாட்ஃபாரமாக OMEGA விளங்குகின்று.
ஹாரியர் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சிஃ இடம்பெற்றிக்கும் என்றாலும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்தன்ன் எஞ்சினாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்று. இந்த எஸ்.யூ.வி க்ரெட்டா, காம்பஸ், கேப்டூர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.