ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை துவங்குவதற்காக முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஃபாக்ஸ்கான் குழுமத்தின் (Hon Hai Technology Group) தலைவர் யங் லீ எலக்ட்ரிக் வாகனம் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்களின் தலைமையகமாக தமிழ்நாடு உருவாகி வரும் நிலையில் ஃபாக்ஸ்கான் வருகை மேலும் தமிழ்நாட்டின் இவி சந்தையில் முக்கிய நிறுவனமாக விளங்க உள்ளது.
Foxconn EV plant
இந்தியாவில் ஃபாக்ஸ்கான் விரிவாக்கத் திட்டத்தில் பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகளை மேற்கொள்ளுவதற்கு, தற்போதுள்ள 30 தொழிற்சாலைகளுக்கு மேலே இருப்பை விரிவுபடுத்துவதும் திட்டம் உள்ளது. ஃபாக்ஸ்கான் இந்தியாவில் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்த முக்கிய கூறுகளின் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் லியு குறிப்பிட்டார்.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தற்போதுள்ள செயல்பாடுகளைத் தவிர, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வசதிகளை விரிவுப்படுத்த ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. புதிய தொழில் பூங்காக்களை நிறுவுவதற்கும், உள்கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் சட்டங்கள் உட்பட வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும் ஒன்றிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பை இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.