இந்தியாவில் சவாலான விலையில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு ஃபிகோ காரின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.5P Titanium AT வேரியன்ட் விலை ரூ.39,000 வரை குறைக்கப்பட்டு தற்போது ரூ.7.70 லட்சம் (விற்பனையக விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலை விபரமானது, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்பியன்ட் வேரியன்ட் மட்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஃபிகோ விலை மற்றும் என்ஜின் விபரம்
இந்த காரில் 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 95 பிஎச்பி குதிரைத்திறன் , 120 என்எம் முறுக்குவிசை திறனையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். அடுத்தாக உள்ள புதிதாக இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 பிஎச்பி குதிரைத்திறன், 150 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
டீசல் என்ஜின் தேர்வில் 99 பிஎச்பி குதிரைத்திறன், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் , 5 வேக மேனுவல் கியர்பாக்ஸை கொண்டதாக உள்ளது.
புதிய ஃபிகோ விலை பட்டியல் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)
வேரியன்ட் | புதிய விலை | பழைய விலை | வித்தியாசம் |
1.2P Ambiente MT | ரூ. 5.23 லட்சம் | ரூ. 5.15 லட்சம் | + ரூ. 8,000 |
1.2P Titanium MT | ரூ. 6.00 லட்சம் | ரூ. 6.39 லட்சம் | – ரூ. 39,000 |
1.2P Titanium Blu | ரூ. 6.65 லட்சம் | ரூ. 6.94 லட்சம் | – ரூ. 29,000 |
1.5D Ambiente MT | ரூ. 6.13 லட்சம் | ரூ. 5.95 லட்சம் | + ரூ. 18,000 |
1.5D Titanium MT | ரூ. 6.90 லட்சம் | ரூ. 7.19 லட்சம் | – ரூ. 29,000 |
1.5D Titanium Blu | ரூ. 7.55 லட்சம் | ரூ. 7.74 லட்சம் | – ரூ. 19,000 |
1.5P Titanium AT | ரூ. 7.70 லட்சம் | ரூ. 8.09 லட்சம் | – ரூ. 39,000 |