ஃபோர்டு எவெரஸ்ட் என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விரைவில் எவெரஸ்ஸ்ட் எஸ்யூவி விற்பனைக்கு செல்ல உள்ளது.
ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி
ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனைக்கு செல்ல உள்ள எவெரஸ்ட் எஸ்யூவி மாடல் அதனை தொடர்ந்து ஆசியா நாடுகளிலும், இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய எண்டேவர் எஸ்யூவி புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் ஹெட்லைட் அறையை சுற்றிய இன்ஷர்டினை கொண்டுள்ளது. புதிய 20 அங்குல அலாய் வீல் டூயல் நிறத்தை பெற்றதாக வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இன்டிரியருடன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஃபோர்ட் Sync 3 அம்சத்துடன் வந்துள்ளது. மேலும் இந்த எஸ்யூவி ரக மாடலில் பாதுகாப்பு சார்ந்த அம்சமாக விளங்கும் ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் பாதாசாரிகளை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் எவெரஸ்ட் எஸ்யூவி ரக மாடலில் ஃபோர்ட் ரேஞ்சர் பிக்அப் டிரக் மாடலில் இடம்பெற்றுள்ள இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வந்துள்ளது. இந்த எஞ்சின் இரண்டு விதமான ஆற்றல் நிலையில் கிடைக்க உள்ளது. 180 ஹெச்பி ஆற்றல் மற்றும் 420 என்எம் டார்க் வழங்குவதுடன், மற்றொரு தேர்வில் ட்வீன் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்ட 213 ஹெச்பி ஆற்றல் மற்றும் 500 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது சந்தையில் உள்ள மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பிஎஸ் 6 தரத்துடன் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா வருகை குறித்து எவ்விதமா உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.