மஹிந்திரா எக்ஸ்யூவி 500 அடிப்படையில் ஃபோர்டு நிறுவனம் வெளியிட உள்ள சி-எஸ்யூவி காரின் அறிமுகம் 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல ஈக்கோஸ்போர்ட் காரில் இடம்பெற உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
ஃபோர்டு-மஹிந்திரா கூட்டணி முயற்சியில் உருவாகவிருந்த பல்வேறு திட்டங்களை கைவிட்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக உலகளாவிய வணிக சூழ்நிலையில் ஏற்பட்ட தாக்கத்தால் கூட்டு நிறுவன முயற்சியை கைவிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் புராஜெக்ட் பிளாக் என்ற பெயரில் XUV500 (W601) காரின் அடிப்படையிலான மாடல் தயாரிப்பு நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
புதிய எக்ஸ்யூவி500 காரின் விற்பனை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாக உள்ளது. ஃபோர்டு காரின் உற்பத்தி மஹிந்திராவின் ஆலையில் நடைபெறும், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் மஹிந்திராவின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகத்தில் எந்த மாற்றும் இல்லை.