CES 2020 அரங்கில் வெளியிடப்பட்டள்ள அமெரிக்காவின் ஃபிஸ்கர் நிறுவனத்தின் ஓசோன் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 482 கிமீ ரேஞ்சை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஓசோன் இ-எஸ்யூவி 2024-ம் ஆண்டில் விற்பனைக்கு வெளியாகலாம்.
லாஸ் வேகாசில் நடைபெற்று வரும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ 2020 அரங்கில் வெளியிடப்பட்டுள்ள ஃபிஸ்கர் ஓசோன் காரில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரு விதமான டிரைவிங் ஆப்ஷனை பெறுகின்றது. முழுமையான நுட்ப விபரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ஃபிஸ்கர் காரில் அதிகபட்சமாக 0-96 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 2.9 விநாடிகளும், 80 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 300 மைல்ஸ் அல்லது 482 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியாகவில்லை.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவிலும், 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஃபிஸ்கர் ஓசோன் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்துள்ளதாக கார் & பைக் இணையதளம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடும் போது பெரும்பாலும் இந்தியாவில் தொடங்கப்பட உள்ள ஆலையிலே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதால் ரூ.30 லட்சத்தில் ஃபிஸ்கர் ஓசோன் கிடைக்க உள்ளது.