அமெரிக்காவின் ஃபிஸ்கர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர், ஓசன் எக்ஸ்ட்ரீம் விக்யான் பேட்டரி மின்சார காரை 100 எண்ணிக்கையில் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
2023 ஆம் ஆண்டின் நான்காவது காலண்டில் டெலிவரி வழங்கப்பட உள்ள ஃபிஸ்கர் ஓசன் காரின் அதிகபட்ச ரேஞ்சு WLTP முறையின் படி 707 km வரை வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Fisker Ocean Extreme Vigyan Edition electric
ஓசன் எக்ஸ்ட்ரீம் விக்யான் பேட்டரி எலக்ட்ரிக் எஸ்யூவி காரில், 20-இன்ச் சக்கரத்தை பெற்று 360 மைல் / 576km என்ற EPA ரேன்ஜ் கொண்டுள்ளது. அடுத்து கிடைக்கின்ற ஓசன் எக்ஸ்ட்ரீம் விக்யான் வேரியண்ட் 707km WLTP வரம்பைக் கொண்டுள்ளது.
3.7 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டுவதுடன் AWD அமைப்பு மற்றும் இரட்டை மோட்டார் விருப்பத்துடன் உள்ளது. இது எர்த், ஃபன் மற்றும் ஹைப்பர் என மூன்று டிரைவிங் மோடுகளைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் CBU முறையில் இந்த EV எஸ்யூவி மாடலை நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த காரை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜெர்மன் சந்தையின் விலை 69,950 EUR ஆகும். இந்தியாவிற்கான இறக்குமதி வரிகள் மற்ற வரிகளுடன் விற்பனைக்கு வரும்பொழுது விலை ரூ. 75-80 லட்சம் விலைக்குள் அமையலாம்.
100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் vigyanedition(at)fiskerinc.com என்ற மின்னஞ்சல் மூலம் ஃபிஸ்கர் நிறுவனத்தை அணுகலாம்.