இத்தாலியை சேர்ந்த சூப்பர் கார் தயாரிப்பாளரான ஃபெராரி நிறுவனம், தனது புதிய போர்டோபினோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் முந்தைய மாடலான கலிபோனியா T கார்களுக்கு மாற்றாக இருக்கும். இந்தியாவில் இந்த காரின் விலை 3.5 கோடி ரூபாயாகும்.
புதிய போர்டோபினோ கார்கள் டூவின் டர்போ 8 சிலிண்டர் 3.9 லிட்டர் இன்ஜின் கொண்டதாக இருப்பதுடன், அதிகபட்ச ஆற்றல் 600 ஹார்ஸ்பவர் மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 760Nm மற்றும் 5250rpm கொண்டதாக இருக்கும். இந்த காரின் டாப் ஸ்பீட் 320kph-ஆக இருக்கும். மேலும் இது 0-100kpm-ஐ 3.5 செகண்டுகளில் எட்டிவிடும். கலிபோர்னியா T வகை கார்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. ஏன்என்றால், இந்த காரின் இன்ஜின் ஆற்றல் அதிகமாக இருந்த போதும், குறைந்த அளவு அவுட்புட் அளித்ததே காரணமாகும். இந்த கார்கள் 553hp மற்றும் உச்சபட்ச டார்க்கியூவில் 775Nm ஆற்றலுடன், இந்த காரில் விலை 2.2 கோடியாக இருந்தது.
புதிய போர்டோபினோ காரில், முழுவதும் புதிய சேஸ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை காரின் எடையில் 80kgs வரை குறைத்துள்ளது. இந்த காரில் அதிகளவிலான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையான சேஸ்கள் மற்றும் நேர்த்திதான எடை குறைப்பு ஆகியவை டார்ஸ்னல் ரிகிடிட்டியை அதிகரித்துள்ளது.
போர்டோபினோ காரின் கேபின்களில், நடுவில் 10.2 இன்ச் கொண்ட பெயரியலவிலான டச்-ஸ்கிரின் மற்றும் பயணிகள் அமரும் இடத்தில் தனியாக ஸ்க்ரீன் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு வசதி, எலக்ட்ரானிக் சீட்களாகும், இந்த சீட்களை 18 வகைகளில் அட்ஜெட்ஸ் செய்து கொள்ள முடியும். போர்டோபினோ காரில், 2+2 சீட்கள் இடம் பெற்றுள்ளது. இதில் இரண்டு வயது வந்தவர்களுடன், பின்புறமாக இரண்டு குழந்தைகளும் அமர முடியும். இதுமட்டுமின்றி இதில் புதிய விண்ட் டிப்ளேக்டர் டிசைனும் இடம் பெற்றுள்ளது. இது காரின் உள்ளே வரும் காற்றை 30 சதவிகிதம் குறைக்க உதவுகிறது.
இந்தியா மார்க்கெட்டில் ஃபெராரி போர்டோபினோ கார்கள், லம்போர்கினி ஹூரக்கான் ஸ்பைடர், போர்ச் 911 டர்போ கப்ரியேட் மற்றும் ஆடி ஆர் 8 ஸ்பைடர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.