சிட்ரோன் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது C5 ஏர்கிராஸ், C3, மற்றும் C3 ஏர்கிராஸ் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றது. மேலும் கோடாக் மஹிந்திரா வங்கியுடன் இணைந்து சிறப்பு இஎம்ஐ திட்டங்களை அறிவித்துள்ளது.
குறிப்பாக சமீபத்தில் ரூ.9.99 லட்சத்தில் வெளியான C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காருக்கு சிறப்பு சலுகையாக ரூ.99,000 வரை வழங்குகின்றது.
Citroen Festive offers
பீரிமியம் எஸ்யூவி சந்தையில் கிடைக்கின்ற ரூ.37 லட்சத்தில் துவங்குகின்ற C5 ஏர்கிராஸ் எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 லட்சம் வரை சலுகைகளை வழங்குகின்றது. அடுத்து சி3 ஹேட்ச்பேக் காருக்கு அதிகபட்சமாக ரூ.99,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.
இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற சிட்ரோன் இ-சி3 எலக்ட்ரிக் மாடலுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.