இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனம் பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்து வருகின்ற C5 ஏர்கிராஸ் காரில் ஆரம்ப நிலை Feel மாடல் ரூபாய் 36 லட்சத்து 91 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது நீக்கப்பட்டு டாப் வேரியண்டான சைன் மட்டும் தற்பொழுது விற்பனையில் கிடைக்க தொடங்கியுள்ளது.
C5 ஏர்கிராஸ் காரில் இந்திய சந்தையில் லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 177 எச்பி பவர் மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும். 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
ஆண்டு இறுதி சலுகைகளின் ஒரு பகுதியாக, சி5 ஏர்கிராஸ் காருக்கு ரூ. 1.75 லட்சம் வரை தள்ளுபடியை சிட்ரோயன் வழங்குகிறது. இருப்பினும், இவை வரையறுக்கப்பட்ட MY2023 மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும்.