ஸ்டெலான்டிஸ் (FCA and PSA Group – Stellantis) கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டின் முதல் இந்திய மாடலாக சி5 ஏர்க்ராஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு ரூ.30 லட்சம் விலையில் வெளியாகவுள்ளது.
ரூ.25-ரூ.30 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற சிட்ரோனின் பிரீமியம் எஸ்யூவி மாடலான சி5 ஏர்க்ராஸ் காருக்கான உதிரி பாகங்கள் தருவித்து (CKD) ஒருங்கிணைக்கப்பட உள்ளது. 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 177hp மற்றும் 400Nm டார்க் வழங்கும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ARAI சான்றிதழ் படி மைலேஜ் லிட்டருக்கு 18.6 கிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,500 மிமீ நீளம், 1,969 மிமீ அகலம் மற்றும் 1,710 மிமீ உயரம் பெற்றுள்ள சி5 காரின் 2,730 மிமீ நீளமான வீல்பேஸ் கொண்டுள்ளது. ஏர்கிராஸில் 580 லிட்டர் கொள்ளளவு பூட் ஸ்பேஸ் பெற்றுள்ள நிலையில் கூடுதலாக பின்புற இருக்கையை மடிக்கும் போது, 1,630 லிட்டர் கொள்ளளவு வரை விரிவாக்கப்படலாம்
சி5 ஏர்கிராஸ் காரில் ஃபீல் மற்றும் ஷைன் என இரண்டு வகைகளில் கிடைக்கும்.
சிட்ரோயன் சி 5 ஏர்கிராஸ் ஃபீல்
எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லேம்ப்
ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்
முன் மற்றும் பின்புற மூடுபனி விளக்குகள்
18 அங்குல அலாய் வீல்
8.0 அங்குல தொடுதிரை சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே
12.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர்
ஹேண்ட்ஸ் ஃப்ரீ பார்க்கிங்
ஓட்டுநருக்கான பவர் இருக்கை
கீலெஸ் என்ட்ரி மற்றும் கோ
இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு
க்ரூஸ் கட்டுப்பாடு
எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
பின்புற பார்வை கண்ணாடியின் உள்ளே ஆட்டோ மங்கலானது
பட்டெல் விளக்குகள்
டயர் பிரஷர் மானிட்டர்
டிரைவ் மோட் மற்றும் டிராக்ஷன் மோட்
6 ஏர்பேக்குகள்
ஈ.எஸ்.பி.
இழுவை கட்டுப்பாடு
ஹீல் டிசென்ட் கட்டுப்பாடு மற்றும் ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட்
ரியர் வியூ கேமரா
முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்
சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் ஷைன்
ஃபீல் வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக
பனோரமிக் சன்ரூஃப்
எல்இடி ஹெட்லேம்ப்
ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் திறப்பு
வருகை & டீலர் விபரம்
இந்திய சந்தையில் வெளியிட உள்ள முதல் மாடல் சி5 ஏர்க்ராஸ் மார்ச் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் முதற்கட்டமாக சென்னை, அகமதாபாத், மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், கொச்சின் மற்றும் கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் La Maison டீலர்கள் துவங்கப்பட உள்ளது. பிறகு, படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளது.