பல்வேறு கார் நிறுவனங்களை தொடர்ந்து சிட்ரோன் இந்திய தனது C3 காரில் டார்க் எடிசன் என்ற பெயரில் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூ.8.38 லட்சம் முதல் ரூ.10.19 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
Citroen C3 Dark Edition
ரூ.19,000 வரை சாதாரண மாடலை விட கூடுதல் விலையில் வந்துள்ள டார்க் எடிசன் ஷைன் வேரியண்டில் அடிப்படையில் உள்ளது.
Live | ₹ 6,23,000 |
Feel | ₹ 7,52,000 |
Shine | ₹ 8,15,800 |
Shine Dual Tone | ₹ 830800 |
Shine Turbo Dual Tone | ₹ 9,35,800 |
Turbo Shine AT | ₹ 9,99,800 |
Turbo Shine AT Dual Tone | ₹ 10,14,800 |
Shine Dark Edition | ₹ 8,38,800 |
Turbo Shine Dark Edition | ₹ 9,58,800 |
Turbo Shine Dark Edition AT | ₹ 10,19,800 |
ஏப்ரல் 10 , 2025 முதல் விற்பனைக்கு கிடைக்கின்ற டார்க் எடிசன் ஆனது இந்நிறுவனத்தின் பாசால்ட் மற்றும் ஏர்கிராஸ் போன்ற மாடல்களிலும் கொண்டு வரப்பட்டு முதல் பாசால்ட் பிளாக் எடிசன் எம்.எஸ் தோனி அவர்களுக்கு டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.
பெர்லா நேரா கருப்பு என்ற நிறத்தை பெற்றுள்ள C3 காரில் உள்ள லோகோ உட்பட அனைத்திலும் எழுத்துகள், கிரில் மற்றும் பக்கவாட்டு மோல்டிங்கு கருமை நிற க்ரோம் பெற்றுள்ளது.
15-இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ள C3 டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், இருக்கைகள், சென்டர் கன்சோல் போன்றவற்றுக்கு கார்பன் பிளாக் நிறத்துடன் சிவப்பு நிற தையல்களை பெற்று சில இடங்களில் பளபளப்பான கருப்பினை கொண்டுள்ளது.
1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
கூடுதலாக, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.