தோற்ற அமைப்பில் மற்றும் வசதியில் பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ள சி3 ஏர் கிராஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 Nm டார்க் 1750rpm-ல் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற மேனுவல் மாடலை விட 15Nm டாரக் கூடுதலாக உள்ளது.
C3 ஏர்கிராஸ் காரின் பரிமாணங்கள் 4323mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1669mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருப்பதுடன், வேறு எந்த போட்டியாளர்களிடமும் இல்லாத 200mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாகும்.
மேனுவல் மாடலை போலவே 5+2 இருக்கை ஆப்ஷனை பெற்று 4 ஒற்றை வண்ண நிறங்கள் 6 டூயல் டோன் நிறங்கள் என 10 நிறங்களை பெற்றுள்ளது.
இந்திய சந்தைக்கு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட சி3 ஏர்கிராஸ் ரூ.9 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.