5+2 இருக்கை ஆப்ஷனை பெற்று பட்ஜெட் விலையில் அமைந்துள்ள சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.34 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
போட்டியாளர்களாக இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Citroen C3 Aircross SUV
முன்பாக முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முழுமையான விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.
5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.
CITROEN C3 AIRCROSS PRICE (EX-SHOWROOM, DELHI) | |
---|---|
Trim | விலை |
You 5S | ₹ 9.99 லட்சம் |
Plus 5S | ₹ 11.34 லட்சம் |
Plus 7S | ₹ 11.69 லட்சம் |
Max 5S | ₹ 11.99 லட்சம் |
Max 7S | ₹ 12.34 லட்சம் |
பிளஸ் மற்றும் மேக்ஸ் வகைகளில் டூயல்-டோன் பெயிண்ட் பெற கூடுதலாக ரூ.20,000 செலுத்த வேண்டியிருக்கும். அடுத்தப்படியாக, வைப் பேக் பெற பிளஸ் வேரியண்டுக்கு கட்டணமாக ரூ.25,000, அதேசமயம் மேக்ஸ் வேரியண்டிற்கு ரூ.22,000 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.