வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் எஸ்யூவி (Citroen Basalt) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் மாடலுக்கு நேரடியான சவாலினை ஏற்படுத்தும் வகையிலான இந்த கூபே மாடலானது மற்ற நடுத்தர எஸ்யூவிகளுக்கும் கடுமையான சவாலினை ஏற்படுத்துகின்றது.
இரண்டு விதமான பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மற்றும் பெறுகின்ற பாசால்ட் மாடலில் 1.2 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆனது பயன்படுத்தப்பட உள்ளது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் 1.2 லிட்டர் எஞ்சின் பெற உள்ளது. டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டும் பெற உள்ளது.
மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ள இந்த கூபே ரக ஸ்டைல் மாடலில் முன்புற தோற்ற அமைப்பு ஏற்கெனவே சந்தையில் கிடைக்கின்ற சி3, சி3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களில் இருந்து பெறப்பட்டிருந்தாலும் புராஜெக்டர் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படையாகவே தற்பொழுது இந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் உயர்த்தப்பட்டு 6 ஏர்பேக்குகள் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ரூ.11 லட்சத்துக்குள் துவங்க உள்ள சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி மாடல் விலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.