எம்.எஸ் தோனி அவர்களுக்கு முதல் பாசால்ட் டார்க் எடிசனை டெலிவரி வழங்கி விற்பனையை துவங்கியுள்ள சிட்ரோன் நிறுவனம் கூபே ரக பாசல்ட்டின் விலையை ரூ.12.80 லட்சத்தில் துவங்கும் என அறிவித்துள்ளது.
Citroen Basalt Dark Edition
ரூ.23,000 வரை சாதாரண மாடலை விட விலை அதிகரிக்கப்பட்டு கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து டர்போ மேக்ஸ் வேரியண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
You | ₹ 8,32,000 |
Plus | ₹ 9,99,000 |
Plus Turbo | ₹ 11,84,000 |
Max Turbo | ₹ 12,57,000 |
Max Turbo Dual Tone | ₹ 12,78,000 |
Plus Turbo AT | ₹ 13,14,000 |
Max Turbo AT | ₹ 13,87,000 |
Max Turbo AT Dual Tone | ₹ 14,08,000 |
Turbo Max Dark Edition | ₹ 12,80,000 |
Turbo AT Max Dark Edition | ₹ 14,10,000 |
(எக்ஸ்-ஷோரூம்)
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
DARK’ பேட்ஜிங் கொண்டு இன்டிரியரில் கருப்பு நிறத்துடன் தோல் இருக்கைகள் மற்றும் கதவு ஆர்ம்ரெஸ்ட்கள் பெற்று வெளிப்புறத்திலும் முழுமையாக கருப்பு நிறத்தை பெற்றதாக வந்துள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
இதுதவிர இந்நிறுவனம் C3, ஏர்கிராஸ் போன்ற மாடல்களிலும் டார்க் எடிசனை வெளியிட்டுள்ளது.