Categories: Car News

புதிய சிட்ரோன் பாசால்ட் பிளாக் எடிசன் டீசர் வெளியானது.!

citroen basalt black edition teasedcitroen basalt black edition teased

தொடர்ச்சியாக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் பிளாக் அல்லது கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மாடல்களை அறிமுகம் செய்து வருகின்ற நிலையில் அந்த வரிசையில் தற்போது பாசால்ட் கூபே மூலம் சிட்ரோன் நிறுவனமும் இணைய உள்ளது.

சிட்ரோனின் பாசால்ட் எஸ்யூவி காரில் கூடுதலாக கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட எடிசனை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்யும் வகையிலான டீசரை இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் லிங்க்டின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக,  1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கின்றது. இன்டீரியர் கருப்பு நிறத்துடன் வெளிப்புறத்தில் கருமை நிறத்துடன், அலாய் வீல் டிசைன் என அனைத்திலும் கருமை நிறத்துக்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம்.

இந்த காரின் நேரடியான போட்டியாளரான கர்வ் மாடலிலும் பிளாக் எடிசன் வரவுள்ளது.

Share
Published by
நிவின் கார்த்தி