இந்தியாவில் பிஓய்டி (BYD) நிறுவனத்தின் புதிய மின்சார பேட்டரி காராக வெளியிடப்பட்டுள்ள சீலயன் 7 (Sealion 7) கிராஸ்ஓவர் எஸ்யூவி உந்துதலில் வடிவமைக்கப்பட்டு ரூ.48.9 லட்சம் முதல் ரூ.54.9 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
BYD Sealion 7
இரு விதமான பவர் மற்றும் மாறுபட்ட ரேஞ்ச் கொண்டிருந்தாலும் இரு மாடல்களும் ஒரே 82.6Kwh LFP பேட்டரி பேக்கினை பெற்றதாக விளங்குகின்றது. RWD கொண்ட வேரியண்ட் பின்புற சக்கரங்கள் வழியாக 313hp பவர் மற்றும் 380Nm டார்க் வழங்கி, 0-100kph வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டும், WLTP மூலம் சான்றிதழ் பெறப்பட்ட ரேஞ்ச் 482km ஆகும்.
பெர்ஃபாமென்ஸ் வேரியண்டில் ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடல் 530hp பவர் மற்றும் 690Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், வெறும் 4.5 வினாடிகளில் 0-100கிமீ வேகத்தை அடைகிறது. இந்த டிரிம் ஆல்-வீல் டிரைவ் கொண்டிருப்பதனால் WLTP, மூலம் சான்றிதழ் பெறப்பட்ட ரேஞ்ச் 456km ஆக உள்ளது.
15.6 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் இயல்பாக 520 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெற்றுள்ள சீலயன் மாடலின் பின்புற இருக்கைகளை மடக்கும் பொழுது அதிகபட்சமாக 1,789 லிட்டர் வரை கிடைப்பதுடன், முன்புறத்தில் பர்ங்க் மூலம் 58 லிட்டர் கிடைக்கின்றது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் சீலயன் 7 காரில் லெவல் -2 ADAS மூலம் பல்வேறு மேம்பட்ட பாதுகாப்புடன், கூடுதலாக 11 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.
டாப் வேரியண்டில் 20 அங்குல அலாய் வீல், பிரீமியம் வேரியண்டில் 19 அங்குல வீல் பெற்றுள்ள மாடலுக்கு கடந்த ஒரு மாதமாக முன்பதிவு நடைபெற்று வருவதனால் 1000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகம் 7, மார்ச் 2025 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
- BYD Sealion 7 RWD – ₹ 48.9 லட்சம்
- BYD Sealion 7 AWD – ₹ 54.9 லட்சம்