பிரீமியம் எஸ்யூவி மாடலாக விளங்குகின்ற மஹிந்திரா அல்டூராஸ் ஜி4 மாடல் முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.99,000 வரை விலை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.28.69 லட்சம் முதல் ரூ.31.69 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
அல்டூராஸ் ஜி4 காரில் 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 178bhp பவர் 420Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் மற்றும் டூ வீல் டிரைவ் கிடைக்கின்றது.
மேலும், இந்த காரின் மைலேஜ் ARAI சோதனையின் படி முந்தைய பிஎஸ்-4 மாடலை விட 0.53 கிமீ வரை உயர்ந்து, இப்போது அதிகபட்சமாக லிட்டருக்கு 12.03 கிமீ வழங்கப்படலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை 2WD வேரியண்டில் 2 காற்றுப்பை, ஏபிஎஸ், இஎஸ்பி, ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹீல் டீசென்ட் கன்ட்ரோல் மற்றும் ரோல்ஓவரை தடுகும் அமைப்பு போன்றவற்றை பெற்றுள்ளது. டாப் வேரியண்டில் 9 காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில் டாப் வேரியண்டில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்ம், க்ரூஸ் கன்ட்ரோல் உட்பட 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் என பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கொரானோ பரவலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், டீலர்கள் திறக்கப்படவில்லை. எனவே, மஹிந்திரா உட்பட பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையை துவங்கியுள்ளது. அந்த வரிசையில் மஹிந்திராவின் இந்த மாடலுக்கு ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
பிஎஸ் 6 மஹிந்திரா அல்டூராஸ் ஜி4 விலை பட்டியல்
Alturas G4 2WD BS6
|
₹ 28.69 லட்சம் |
Alturas G4 4WD BS6
|
₹ 31.69 லட்சம் |
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் இசுசூ MU-X போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.