ஆடம்பர கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் வரும் ஜனவரி 4 முதல் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விலையை தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களை விட 2% கூடுதலாக அதிகரிக்க உள்ளது.
இந்நிறுவன அறிக்கையில் விலை உயர்வானது அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலையை காரணமாக குறிப்பிட்டுள்ளது. முன்பாக கடந்த நவம்பர் 2020-ல் இந்நிறுவனம் 3 % வரை விலை உயர்த்தியிருந்தது குறிப்பிடதக்கதாகும்.
உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்படுகின்ற (சி.கே.டி) தயாரிப்புகள் மற்றும் முற்றிலும் வடிவமைக்கப்பட்டு இறக்குமதி மாடல்கள் என அனைத்தும் விலை உயரவுள்ளது. பி.எம்.டபிள்யூ இந்தியாவின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடல்களான 2 சீரிஸ் கிரான் கூபே, 3 சீரிஸ், 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ் 1, எக்ஸ் 3, எக்ஸ் 4, எக்ஸ் 5, எக்ஸ் 7 மற்றும் மினி கண்ட்ரிமேன் ஆகியவை அடங்கும். முற்றிலும் வடிவமைக்கப்படு இறக்குமதி செய்யப்படுகின்ற 8 சீரிஸ் கிரான் கூபே, எக்ஸ் 6, இசட் 4, எம் 2 போட்டி, எம் 4 கூபே, எம் 5 போட்டி, எம் 8 கூபே, மினி 3 கதவு, மினி 5-கதவு, மினி கன்வெர்டபிள், மினி கிளப்மேன் மற்றும் மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஆகியவை அடங்கும்.