ரூ. 75.90 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் டூரீஸ்மோ M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிசன் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வந்து நிலையில், ஆன்லைனில் தனது இணையதளத்தில் முன்பதிவு துவங்கியுள்ளது.
630i M ஸ்போர்ட் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு சில கூடுதலான டிசைன் மாற்றங்களை பெற்றதாகவும், சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டதாகவும் வந்துள்ளது.
BMW 6 Series GT M Sport Signature
6 சீரிஸ் ஜிடி எம் சிக்னேச்சர் எடிசனில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 261.5 bhp மற்றும் 400 Nm டார்க் வெளியிடுகிறது. இந்த என்ஜினில் எட்டு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஐந்து வெவ்வேறு டிரைவிங் மோடுகளைக் கொண்டுள்ளது. கம்ஃபோர்ட், கம்ஃபோர்ட்+, ஸ்போர்ட், ஈகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் ஆகும். 0 முதல் 100kmph எட்ட 6.5 வினாடிகள் போதுமானதாகும்.
பிஎம்டபிள்யூ சைகை இயக்க வசதிகளுடன் கூடிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர். முழுமையான HD தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் மானிட்டர்கள், ஒரு ப்ளூ-ரே பிளேயர், ஒரு ஸ்கிரீன் மிரரிங் செயல்பாடு மற்றும் இரண்டு யூஎஸ்பி போர்ட் உள்ளடக்கிய பின்-சீட் என்டர்டெயின்மென்ட் ப்ரொபஷனல் வசதியும் இதில் உள்ளது.
ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங், கீலெஸ் என்ட்ரி, ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சுற்றுப்புற விளக்குகளுடன் கூடிய பிஎம்டபிள்யூ டிஸ்ப்ளே கீ ஆகியவை உள்ளது.