வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் பிரத்தியேகமான கார் கிராஷ் டெஸ்ட் சோதனை முறையான பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (BNCAP – Bharat New Car Safety Assessment program) துவங்குவதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் தற்பொழுது வரை சர்வதேச என்சிஏபி மைய முடிவுகளை அறிந்து வந்த நிலையில், இனி உள்நாட்டில் சோதனை செய்யப்பட உள்ளது.
Bharat NCAP
கடந்த அக்டோபர் 1 முதல் துவங்க திட்டமிடப்பட்டிருந்த பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டம் பண்டிகை காலத்தை கடந்த பின்னர் தற்பொழுது முதல் சோதனை டிசம்பர் 20 ஆம் தேதி துவங்க உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் கிராஷ் டெஸ்ட்டில் வரவுள்ள முதல்முறையாக வரவுள்ள மாடல்கள் டாடா பஞ்ச், கியா சொனெட் , ஹூண்டாய், மஹிந்திரா உட்பட மாருதி என பல்வேறு நிறுவனங்களின் 30க்கு மேற்பட்ட மாடல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்வது எப்படி ?
8 பயணிகளுக்குள் மற்றும் 3.5 டன் எடைக்கு குறைவான வாகனங்கள் நிறுவனங்கள் தாமாகவே விருப்பத்துடன் வழங்க முன்வந்தால் நேரடியாக டீலர்களிடம் இருந்து அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மற்றும் சர்வதேச ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப மையம் (ICAT) மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
சிஎன்ஜி, எலக்ட்ரிக் மற்றும் ICE வாகனங்களை மதிப்பீடு செய்து சோதனை செய்யும் வகையில் சோதனைகளில் முன்பக்கத்தை மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஆஃப்செட் டிஃபார்மபிள் தடையில் வாகனத்தை மோதச் செய்தல், பக்கவாட்டு மோதல் சோதனை ( மணிக்கு 50 கிமீ வேகத்தில் நடத்தப்படும்) மற்றும் போல் பக்க வாட்டு மோதல் சோதனை (மதிப்பீடு பெற வாகனங்கள் கட்டாயம்) ஆகியவை அடங்கும்.
முழுமையான ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுவதற்கு, வாகனம் குறைந்தபட்சம் 27 புள்ளிகள் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் பெற்றிருக்க வேண்டும். அடுத்தப்படியாக, 41 புள்ளிகளை குழந்தைகளின் பாதுகாப்பில் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.