இந்தியாவில் மிகவும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் கூபே ரக ஆடி RS5 காரை ரூ.1.10 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி ஏ5 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இரு கதவுகளை கொண்ட கூபே ரக மாடலாக ஆர்எஸ்5 விளங்குகின்றது.
ஆடி RS5 கார்
இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்5 காரில் முந்தைய 4.2 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 2.9 லிட்டர் ட்வீன் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக சுமார் 450 ஹெச்பி ஆற்றல் மற்றும் 600 என்எம் இழுவைத் தின் வழங்குகின்றது. ஆர்எஸ்5 காரில் 8 வேக ஆட்டோமேட்டிக் ஆடி குவாட்ரோ கியர்பாக்ஸ் கயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.
ஆடி ஆர்எஸ்5 காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மணிக்கு 280 கிமீ ஆக உயர்த்த கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படும் என ஆடி தெரிவித்துள்ளது.
மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் அம்சங்களை பெற்று விளங்கும் இந்த காரில் விரிச்சுவல் காக்பிட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு 19 அங்குல அலாய் வீல் நிரந்தர அம்சமாகவும், 20 அங்குல அலாய் வீல் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ M4 விளங்குகின்றது.
ஆடி RS5 கார் விலை ரூ.1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)