முழுமையாக கருப்பு நிறத்தை பெற்ற ஆடி Q5 எஸ்யூவி மாடலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு ரூ.69.72 லட்சம் விலையில் வெளியாகியுள்ளது.
Q5 எஸ்யூவி காரில் 261bhp பவர் மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 6.1 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும். Q5 ஆனது அடாப்டிவ் சஸ்பென்ஷனையும் பெறுகிறது டிரான்ஸ்மிஷன் அமைப்பில் ஏழு-வேக DCT கொண்டுள்ளது.
Audi Q5 Limited Edition
க்யூ5 எஸ்யூவி காரின் லிமிடெட் எடிஷன் மாடலில் பிளாக் அவுட் செய்யப்பட்ட பிரேம் முன்புற கிரில்லைப் பெறுகிறது. மேலும், பிளாக் ஸ்டைலிங் தொகுப்பில் கருப்பு ஆடி நிற லோகோ மற்றும் கூரை தண்டவாளங்கள் உள்ளன. லிமிடெட் எடிஷன் மாடல் மித்தோஸ் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.
ஒகாபி பிரவுன் நிறத்தை பெற்ற 10 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று-மண்டல ஏசி கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 30 வண்ணங்கள் கொண்ட ஆம்பின்ட் விளக்குகள் கொண்டுள்ளது.