டீசல் மோசடி வழக்கில், ஆடி நிறுவனம் 800 மில்லியன் யுரோ அபராதம் செலுத்த ஒப்பு கொண்டுள்ளதாக வோக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது,
இதுகுறித்து ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி ஏஜி அபராதம் செலுத்த ஒப்பு கொண்டது. ஆடி நிறுவனத்தின் V6 மற்றும் V8 டீசல் கார்களில் ஏற்பட்ட மோசடி காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் குறித்து பேசிய வழக்குரைஞர், ஆடி நிறுவனத்தின் மீதான நிர்வாக வழக்குகள் அனைத்து நீரவு பெற்று விட்டன. மொத்தமாக அப்ராத்தம் செலுத்த வேண்டியுள்ளது.
உலக அளவில் சராசரியாக் ஐந்து மில்லியன் கார்கள் 2004 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதம், தவறான விளம்பரம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே விதிக்கப்பட்டுள்ளது.