ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி மாடலாக DBX அறிமுகம் செய்யப்பட்டு இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள ட்வீன் டர்போ 4.0 லிட்டர் வி8 என்ஜின் அதிகபட்சமாக 542 hp பவர் மற்றும் 700 என்எம் டார்க் வழங்குகின்றது. டிபிஎக்ஸ் எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 291 கிமீ ஆகும்.
போர்ஷே, லம்போர்கினி மற்றும் பென்ட்லீ போன்ற சூப்பர் கார் தயாரிப்பாளர்களின் எஸ்யூவி மாடல்ளுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள டிபிஎக்ஸ் மிகவும் உயர் தரமான இன்டிரியர் அமைப்பு பவர்ஃபுல்லான என்ஜின் மற்றும் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை கொண்டு கவர்ந்திழுக்கின்றது.
பிரிட்டிஷ் தயாரிப்பாளரின் வழக்கமான அகலமான முகப்பு கிரில் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்துள்ள ஹெட்லைட் மற்றும் செவ்வகமான முறையில் இணைக்கப்பட்ட எல்இடி ரன்னிங் விளக்குகள் கொண்டுள்ளது. பக்கவாட்டு அமைப்பில் நேர்த்தியான அலாய் வீல், பின்புறத்தில் தட்டையான எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.
DBX எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள இரட்டை டர்போ 4.0 லிட்டர் வி8 என்ஜின் அதிகபட்சமாக 542 ஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் வழங்குகின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். ஆல் வீல் டிரைவ் வசதியுடன் 9 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் இடம்பெற்றுள்ளது. டிபிஎக்ஸ் எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 291 கிமீ ஆகும்.
டிபிஎக்ஸ் காரில் மூன்று ஸ்போக்குகளை பெற்ற ஸ்டீயரிங் வீல் பெற்று மிக நேர்த்தியான முறையில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 12.3-அங்குல அளவைக் கொண்ட டிஜிட்டல் கிளஸ்டர் உள்ளது. அதே நேரத்தில், இன்போடெயின்மென்ட் அமைப்பிற்குப் பயன்படுத்தப்படும் பெரிய 10.25 இன்ச் தொடுதிரை டாஷ்போர்டில் பெரும்பான்மையாக உள்ளது. இது ஆப்பிள் கார் ப்ளேவை ஆதரிக்கிறது. இந்த திரைக்கு மேலே நேரடியாக அமைந்துள்ள பல பொத்தான்கள் காணப்படுகின்றன, அதே நேரத்தில் ஏர் கண்டிஷனிங் மற்றும் வெப்ப அமைப்புகளுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. சன் ரூஃப், மிக நேர்த்தியான அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் உயர் ரக பிரீமியம் இருக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது.
அடுத்த ஆண்டின் மத்தியில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஆஸ்டன் மார்டின் DBX எஸ்யூவி இங்கிலாந்தில் ரூ. 1.46 கோடி (£158,000) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.