உலகின் முதல் சூப்பர் டூரர் என்ற பெருமைக்குரிய ஆஸ்டன் மார்ட்டின் DB12 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் சமீபத்தில் விற்பனைக்கு ரூ.4.59 கோடியில் வெளியிடப்பட்டது.
ஆஸ்டன் மார்ட்டினின் 110வது பிறந்தநாள் மற்றும் DB பெயரின் 75வது ஆண்டு விழா என இரண்டையும் கொண்டாடும் வகையில் டிபி12 வெளியிடப்பட்டுள்ளது.
Aston Martin DB12
இப்பொழுது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவனத்தால் கைகளால் தயாரிக்கப்பட்ட ட்வீன்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 680PS மற்றும் 800Nm வெளிப்படுத்துகின்றது. இதில் எட்டு வேக ZF கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை கேபினின் மையப் பகுதியில் வழங்கியுள்ளது. ‘நீர்வீழ்ச்சி’ என்று அழைக்கப்படும் வகையில் வியத்தகு சரிவான சென்டர் கன்சோலில் உள்ளது. உயர்ந்த ஹெச்டி கொண்ட திரை மற்றும் வெறும் 30 மில்லி விநாடிகளில் தொடு உள்ளீடுகளுக்கு செயல்படும் வகையில், இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களை மெற்ற முதல் ஆஸ்டன் மாடலாகவும் உள்ளது.
இந்திய வாகனத் துறையில் DB12 மூலம் ஆஸ்டன் மார்ட்டினின் வருகையானது முக்கியமான தருணத்திற்குச் சிறிது குறைந்தது அல்ல இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த லக்ஸுரியையும், பெர்ஃபார்மன்ஸையும் வழங்குவதற்காக இந்த பிராண்டு
தொடர்ந்து கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு இது ஒரு சான்றாகும்.