ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி நிறுவனம் சமீபத்தில் தனது புதிய அவுட்லேண்டர் எஸ்யூவிகளை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த நிறுவனம், எக்லிப்ஸ் எஸ்யூவி மற்றும் எக்ஸ்பெண்டர் கிராஸ்ஓவர்-எம்.பி.வி., கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் தனது மூன்றாம் ஜெனரேசன் பஜேரோ ஸ்போர்ட் கார்களை வரும் 2019ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த தகவலில், புதிய மாடல்கள், துவக்கத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் என்றும், சிறிது காலத்திற்கு பின்னர் உள்ளூர் அசம்பெளிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலில் புதிய பஜேரோ ஸ்போர்ட்கள் விலை பட்டியலுடன் வெளியாகும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் தலைமுறை பஜேரோ ஸ்போர்ட் கார்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் விற்பனை செய்ப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதுமட்டுமின்றி நிறுவனம் விரைவில் பேஸ்லிப்ட் வெர்சன் எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டிரிக்டன் பிக்-அப் டிராக் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்கள், கடினமாக சாலைகளிலும் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். நான்கு வீல் டிரைவ் கொண்ட இந்த கார்கள், கடினாமான சாலைகளில் பயணிக்க தனியான பேக்கேஜ் உடன் வெளி வருகிறது. இந்தியாவில் அறிமுகமாக உள்ள புதிய மிட்சுபிஷி எஸ்யூவிக்கள் ரீட்-2 என்ற பெயரில் வெளியாக உள்ளது.
மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் கார்களின் ஸ்டைல்-ஐ பொருத்தவரையில், ஆர்ப்பாட்டமான முன்புற தோற்றத்துடன், ஸ்டிரைக்கிங் கிரில் மற்றும் ஷார்ப் ஹெட்லேம்களும் பொருத்தப்பட்டுள்ளது. கேபின்களில், பல்வேறு உயர்ந்த வசதிகள், லெதர் அப்ஹோல்ஸ்டிரி, டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் செவன் ஏர்பேக்ஸ், போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி மிட்சுபிஷி எக்ஸ்பெண்டர் எம்பிவி கார்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
காரின் பென்னட்-ஐ பொறுத்தவரையில், புதிய பஜ்ரோ ஸ்போர்ட்களில் 2.4 லிட்டர் MIVEC டீசல் இன்ஜின்களுடன், 181bhp ஆற்றலுடன், 430Nm டார்க்யூ-வை கொண்டுள்ளது. இந்த காரில் ஆற்றல்கள் நான்கு வீல்களுக்கும் 8-ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மூலம் கடத்தப்படுகிறது. இந்த இன்ஜின்கள் BS VI கம்ப்ளைன்ட் யூனிட்டாக இருக்கும். புதிய பஜாரோ, டொயோட்டா ஃபோர்டுனர், ஃபோர்ட் எண்டெவர் மற்றும் ஸ்கோடா கொடியாக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.