இந்திய சந்தையில் பட்ஜெட் விலை கார்களில் ஹூண்டாய் AX1 மைக்ரோ எஸ்யூவி ஸ்டைலை பெற்ற மாடலை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. விற்பனைக்கு கிடைக்கின்ற மஹிந்திரா கேயூவி 100, மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் வரவிருக்கும் டாடா ஹார்ன்பில் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
காம்பேக்ட் எஸ்யூவி கார் வென்யூ மாடலுக்கு கீழாகவும், சான்ட்ரோ காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள ஹூண்டாய் AX1 காரின் நீளம் 3.8 மீட்டர் கொண்டிருக்கலாம். கிரெட்டா, வென்யூ போன்றவற்றின் முன்புற அமைப்பினை பெற்றிருக்கலாம். முழுமையாக முக்காடு போடப்பட்டுள்ள காரில் 15 அங்குல அலாய் வீல் ஸ்டைலிஷாக அமைந்துள்ளது.
கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், சான்ட்ரோ காரில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனையும் கொண்டிருக்கலாம். 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி காரின் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலைக்குள் வெளியிடப்படலாம். விரைவில் வரவிருக்கும் டாடா ஹார்ன்பில் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தலாம்.
web title : new Hyundai AX1 micro SUV spotted