ரூ.1.06 கோடி ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள ஜாகுவார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி ஐ-பேஸ் காரின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 470 கிமீ தொலைவு பயணிக்கும் திறனை கொண்டிருக்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குறைந்த விலை மின்சார கார்களை விட பிரீமியம் ரக மின்சார கார்களுக்கான சந்தை விரிவடைந்து வருகின்ற நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQC காருக்கு சவாலாகவும், அடுத்து வரவிருக்கும் ஆடி இ-ட்ரான் மாடலுக்கும் போட்டியாக விளங்கும்.
ஜாகுவார் i-Pace சிறப்புகள்
S, SE மற்றும் HSE என மூன்று வேரியண்டுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஐ-பேஸில் பொதுவாக 90kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 400 ஹெச்பி பவரை, 696Nm டார்க் உருவாக்குகிறது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.8 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.
பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 100kW விரைவு முறையிலான ரேபீட் சார்ஜரில் 0-80 சதவீதம் எட்டுவதற்கு 45 நிமிடங்களும், 7.4Kw ஏசி வால் சார்ஜரில் 10 மணி நேரம் ஆகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 470 கிமீ கிடைக்கும் என WLTP மதிப்பிட்டுள்ளது. ஆனால் ARAI சோதனையின் படி ரேஞ்சு விபரம் வெளியாகவில்லை.
டாடா பவர் மூலம் இணைந்து ஜாகுவார் ஐ-பேஸ் கார் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் சார்ஜிங் கேபிள் மற்றும் 7.4 கிலோவாட் AC சார்ஜரை பொருத்தி தரப்பட உள்ளது.
இந்நிறுவனம், 8 ஆண்டு அல்லது 1,60,000 கி.மீ பேட்டரி உத்தரவாதத்துடன் கூடுதலாக 5 ஆண்டு சர்வீஸ் மற்றும் 5 ஆண்டு சாலையோர உதவியை வழங்குகிறது.
2021 Jaguar I-Pace prices (ex-showroom, India) | |
Variant | Price |
S | Rs 1.06 crore |
SE | Rs 1.08 crore |
HSE | Rs 1.12 crore |