Categories: Car News

2025 ஹோண்டா சிட்டி அபெக்ஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது.!

2025 ஹோண்டா சிட்டி அபெக்ஸ் எடிசன்

சமீபத்தில் எலிவேட் காரில் அபெக்ஸ் எடிசனை தொடர்ந்து 5 ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் அபெக்ஸ் சிறப்பு எடிசன் ரூ.13.30 லட்சம் முதல் ரூ.15.62 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள நிலையில் குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

Honda City Apex Edition

6 வேக மேனுவல் 17.8 கிமீ மற்றும் 18.4 கிமீ சிவிடி மைலேஜ் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 121PS பவர் மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. V, VX என இரண்டில் மட்டும் கிடைக்கின்ற அபெக்ஸ் மாடலில் குறிப்பிடதக்க வசதிகள் பின்வருமாறு;

  • பழுப்பு நிற உட்புறங்கள்
  • பிரீமியம் லெதரெட் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்
  • லெதரெட் கன்சோல் அலங்காரம்
  • பிரீமியம் லெதரெட் டோர் பேடிங்
  • இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் டோர் பாக்கெட்டில் ரிதம்மிக் ஆம்பியன்ட் விளக்குகள் – 7 வண்ணங்கள்
  • அபெக்ஸ் எடிஷன் பிரத்யேக இருக்கை கவர்கள் மற்றும் மெத்தைகள்
  • ஃபெண்டர்களில் அபெக்ஸ் எடிஷன் பேட்ஜ்
  • டிரங்கில் அபெக்ஸ் எடிஷன் பேட்ஜ்

City Apex Edition price

Honda

City

Standard Variant

Ex. Showroom

(Delhi)

Effective Price of Apex Edition for

Limited Period (Delhi)

V MT ₹ 13,05,000 ₹ 13,30,000
V CVT ₹ 14,30,000 ₹ 14,55,000
VX MT ₹ 14,12,000 ₹ 14,37,000
VX CVT ₹ 15,37,000 ₹ 15,62,000

Share
Published by
MR.Durai
Tags: Honda City