டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற நெக்ஸான் டர்போ சிஎன்ஜி காரில் கூடுதலாக தற்பொழுது டார்க் சிறப்பு எடிசன் ரூ. 12.70 லட்சத்தில் துவங்குகின்ற மாடல் முழுமையான கருப்பு நிறத்துடன் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் பெற்று இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டாப் மூன்று வேரியண்ட் Creative + S, Creative + PS மற்றும் Fearless + PS ஆகியவற்றில் மட்டும் இடம்பெற்றுள்ள டார்க் எடிசன் மற்ற சாதரண மாடலை விட ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை விலை வித்தியாசம் கூடுதல் கருப்பு நிறத்துக்கு பெற்றுள்ளது.
சிஎன்ஜி நெக்ஸான் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் 100 PS பவரை வெளிப்படுத்தவும் 170 Nm டார்க் வழங்கும் வகையில் என்ஜினை கொண்டு வந்திருக்கின்றது இந்த எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக 2025 நெக்சானில் ராயல் ப்ளூ, கிராஸ்ஃபீல்டு பீஜ் என இரு புதிய நிறங்களை பெற்று தற்பொழுது ரூ.8 லட்சம் முதல் ரூ.14.50 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.
Nexon Dark CNG Creative + S – ₹ 12.70 லட்சம்
Nexon Dark CNG Creative + PS – ₹ 13.70 லட்சம்
Nexon Dark CNG Fearless + PS – ₹ 14.30 லட்சம்
(Ex-showroom)