குறைந்த விலையில் கிடைக்கின்ற 7 இருக்கை பெற்ற ரெனால்ட் ட்ரைபர் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் கூடுதல் வசதிகளுடன் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டு, தற்பொழுது ரூ.6.10 லட்சம் முதல் ரூ.8.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கின்றது.
2025 Renault Triber
எஞ்சின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை, தொடர்ந்து 2025 கிகர் மாடலில் 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
RXE, RXL, RXT, மற்றும் RXZ என நான்கு விதமாக கிடைக்கின்ற ட்ரைபரில் அனைத்து வேரியண்டிலும் சென்டரல் லாக்கிங் உடன் 4 பவர் விண்டோஸ் கொடுக்கப்பட்டு, நடுத்தர RXL வேரியண்டில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் ரிவர்ஸ் கேமரா, ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் RXT வேரியண்டில் 15 அங்குல ஃபிளக்ஸி வீல் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும் சற்று கூடுதலான விலையில் பிரபலமான மாருதி எர்டிகா, ரூமியன் கிடைக்கின்றது.