வரும் 2025 ஜனவரி 17ல் துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் 2025 (Bharat Mobility Global Expo) ஆம் ஆண்டிற்கான புதிய டாடா மோட்டார்ஸ் டிகோர் மற்றும் டியாகோ என இரு மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்படும் நிலையில் கூடுதலாக எலெக்ட்ரிக் மாடலும் புதுப்பிக்கப்படலாம்.
டாடாவின் குறைந்த விலை செடான் மற்றும் ஹேட்ச்பேக் என இரண்டு பிரிவிலும் கிடைக்கின்ற இந்த மாடலில் பொதுவாக ஒரே எஞ்சினை பகிர்ந்து கொள்ளும் நிலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் 6000 rpm-ல் 86hp மற்றும் 3300 rpm-ல் 113Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. சிஎன்ஜி ஆப்ஷனில் 6000 rpm-ல் 77hp மற்றும் 3500 rpm-ல் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
எஞ்சின் பவர் மற்றும் டார்க் உட்பட கியர்பாக்ஸ் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது.
தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் முன்புற பம்பர், பின்புற பம்பர் உள்ளிட்டவற்றுடன் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல் பெறக்கூடும். இன்டீரியரை பொறுத்தவரை சிறிய அளவிலான நிற மாற்றங்கள் மற்றும் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்ட சில கூடுதல் வசதிகள் பெறும் வாய்ப்புகள் உள்ளது.
டிகோர் செடான் போட்டியாளரான டிசையர் சன்ரூஃப் பெறும் நிலையில் மற்றொரு போட்டியாளரான அமேஸ் காரில் ADAS பெறுகின்ற நிலையில், ஹூண்டாய்ஆரா உள்ளிட்ட கார்களை எதிர்கொள்ள புதிய டிகோர் அனேகமாக சன்ரூஃப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டியாகோ மாடலுக்கு போட்டியாக ஸ்விஃப்ட், கிராண்ட் ஐ10 உட்பட மற்ற சிறிய ரக வேகன் ஆர், செலிரியோ போன்றவற்றையும் எதிர்கொள்ள உள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகின்ற இரு மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2025ல் காட்சிப்படுத்தப்படலாம். ஏற்கனவே, சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள இரு மாடல்களும் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.