மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிராண்ட் விட்டாரா எஸ்யூவி 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு, தற்பொழுது ரூ11.42 லட்சம் முதல் ரூ.20.68 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டெல்டா + ஹைபிரிட் என்ற கூடுதல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக Zeta (O), Zeta+ (O), Alpha (O) மற்றும் Alpha+ (O) போன்ற வேரியண்டுகளில் ஆப்ஷனலாக சன்ரூஃப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் பெற்ற ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளில் பெற்றுள்ளது.
சமீபத்தில் வந்த 2025 டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைபிரிட் போல இந்த காரிலும் 15W USB-C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் LED ரீடிங் விளக்குகள் அனைத்து வகையிலும், எட்டு வழி எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை, காற்றோட்டமான முன் இருக்கைகள், பின்புற கதவு சன்ஷேடுகள் மற்றும் ஆம்பியன்ட் விளக்குகள் உள்ளன.
1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றன, அதே நேரத்தில் 4WD மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும் உள்ளது. 12V ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரின் உதவியுடன் மைல்டு ஹைபிரிட் பெற்ற இந்த எஞ்சின் கொண்ட மாடல் 21.12kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.
அடுத்து, 1.3 லிட்டர் மூன்று சிலிண்டர் ஹைபிரிட் எஞ்சின் அதிகபட்சமாக 92hp, 122Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கூடுதலாக உள்ள பேட்டரி இணைந்து ஒட்டுமொத்தமாக 116hp, 141Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ-சிவிடி கியர்பாக்ஸ் பெற்று இந்த எஞ்சின் கொண்ட மாடல் 27.7kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.
2025 Maruti Suzuki Grand Vitara prices (Ex-showroom INR) | |||||
Smart Hybrid | ALLGRIP Select | Strong Hybrid | |||
Sigma | 11,42,000 | ||||
Delta | 12,53,000 | ||||
Delta AT | 13,93,000 | Delta+ e-CVT | 16,99,000 | ||
Zeta | 14,67,000 | ||||
Zeta Dual Tone | 14,83,000 | ||||
Zeta (O) | 15,27,000 | ||||
Zeta Dual Tone (O) | 15,43,000 | ||||
Zeta AT | 16,07,000 | Zeta+ e-CVT | 18,60,000 | ||
Zeta AT Dual Tone | 16,23,000 | Zeta+ e-CVT Dual Tone | 18,76,000 | ||
Zeta AT (O) | 16,67,000 | Zeta+ e-CVT (O) | 19,20,000 | ||
Zeta AT Dual Tone (O) | 16,83,000 | Zeta+ e-CVT Dual Tone (O) | 19,36,000 | ||
Alpha | 16,14,000 | ||||
Alpha Dual Tone | 16,30,000 | ||||
Alpha (O) | 16,74,000 | ||||
Alpha Dual Tone (O) | 16,90,000 | ||||
Alpha AT | 17,54,000 | Alpha 4WD AT | 19,04,000 | Alpha+ e-CVT | 19,92,000 |
Alpha AT Dual Tone | 17,70,000 | Alpha 4WD AT Dual Tone | 19,20,000 | Alpha+ e-CVT Dual Tone | 20,08,000 |
Alpha AT (O) | 18,14,000 | Alpha 4WD AT (O) | 19,64,000 | Alpha+ e-CVT (O) | 20,52,000 |
Alpha AT Dual Tone (O) | 18,30,000 | Alpha 4WD AT Dual Tone (O) | 19,80,000 | Alpha+ e-CVT Dual Tone (O) | 20,68,000 |