நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய டிசையர் காரின் தோற்ற அமைப்பு மற்றும் முக்கிய விபரங்கள் ஆனது கசிந்துள்ளது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது இந்த கார்கள் டீலர்ளுக்கு வர துவங்கியுள்ளதால் உடனடியாக டெலிவரியும் 11ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்பட உள்ளது.
ஸ்விஃப்ட் காரில் இருந்து மாறுபட்ட தோற்ற அமைப்பினை முன்புறத்தில் வெளிப்படுத்தும் இந்த மாடலானது மிகவும் நேர்த்தியான மற்றும் அதே நேரத்தில் பிரீமியமான எல்இடி விளக்குகளை கொண்டிருக்கின்றது. மேலும், இதனுடைய ஸ்டைலிங் எலமெண்ட்ஸ் என பல்வேறு மாறுபாடுகளை கொண்டிருப்பதனால் மிகவும் ஸ்டைலிஷ் ஆக ஒரு ஸ்போட்டிவ்வான தோற்றத்தை பெறுகின்றது.
பின்புறத்தில் இந்த மாடலில் மிக நேர்த்தியான எல்இடி டெயில் விளக்குகள் ஆனது Y வடிவில் கொடுக்கப்பட்டிருக்கின்றது, குரோம் ஸ்டிரிப் இணைக்கப்பட்டு, மேற்கூரையில் சார்ப் ஃபின் ஆண்டனா கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இன்டீரியரில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் காரை போலவே அமைந்திருந்தாலும் சிறிய அளவிலான மாறுதல்கள் மற்றும் நிறங்கள் ஆனது சற்று மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மற்றபடி இந்த மாடலில் 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் சார்ஜிங், குரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் பெற்றிருக்கும்.
1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனில் பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.
புதிய டிசையர் காரின் ஆரம்ப விலை ரூ.7 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 6 ஏர்பேக்குகள் பெற்று மூன்று-புள்ளி இருக்கை பெல்ட், சீட் பெல்ட் ரிமைன்டர், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ABS உடன் EBD ஆகிய வசதிகளை கொண்டிருக்கும்.
imagesource – carlord_767/Instagram