மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சிறிய ரக காரான செலிரியோ மாடலில் 6 ஏர்பேக்குகள், 3 புள்ளி இருக்கை பெல்ட் என இரண்டும் அனைத்து வேரியண்டிலும் விற்பனைக்கு ரூபாய் 5.64 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரை விலையை நிர்ணயம் செய்துள்ளது. முந்தைய மாடலை விட ரூ.16,000 முதல் ரூ.32,500 வரை விலையை உயர்த்தியுள்ளது.
செலிரியோவில் தொடர்ந்து 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட அதிகபட்சமாக 67 HP பவர் மற்றும் 94 Nm டார்க்கை வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீடு AMT கொண்டுள்ளது. கூடுதலாக கிடைக்கின்ற சிஎன்ஜி மாடல் 56 hp பவர் மற்றும் 82.1Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டுள்ளது.
இந்த காரின் ARAI சான்றளிக்கப்பட்ட மைலேஜ் லிட்டருக்கு 25.24km முதல் 24.97km வரை மேனுவல், ஏஜிஎஸ் லிட்டருக்கு 26.00km மற்றும் சிஎன்ஜி கிலோவுக்கு 34.43km ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய ரக கார் சந்தையில் மிகவும் பிரபலமாக விளங்குகின்ற இந்த காருக்கு போட்டியாக சந்தையில், மாருதி வேகன் ஆர், ரெனால்ட் க்விட் , டாடா டியாகோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளிட்ட மாடல்கள் கிடைக்கின்றன.
2025 மாருதி செலிரியோ காரில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய பாதுகாப்பு சார்ந்த மேம்பாடு மிகவும் கவனிக்க வேண்டிய அம்சமாக சந்தையில் கவனிக்கப்படுகின்றது. 6 ஏர்பேக்குகளை தவிர ஏபிஎஸ் உடன் இபிடி, ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ரிவிர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளது.