பிக்கப் டிரக் சந்தையில் டாஸ்மேன் மூலம் நுழைந்துள்ள கியா நிறுவனம் பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் டிரக் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, மத்திய கிழக்கு, கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு தயாரிக்கப்பட்டுள்ள டாஸ்மேன் ஏற்கனவே சந்தையில் பிரபலமாக உள்ள டொயோட்டா ஹைலக்ஸ், ஃபோர்டு ரேஞ்சர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
லேடர் ஃபிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டாஸ்மேனில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் விருப்பங்களில் கிடைக்கின்றது. இதில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 277 hp (281 PS) மற்றும் 421 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. அடுத்து, 2.2-லிட்டர் டர்போ டீசல் 207 hp (210 PS) மற்றும் 441 Nm டார்க் வழங்குகிறது.
இரண்டிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் கூடுலாக டீசல் மாடலில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்தப்படியாக, டாப் வேரியண்டுகளில் 4WD பெற்று செலெக்டபிள் டெர்ரெயின் மோடுகளை பெற்று (Sand, Mud, Snow, and Rock) கூடுதலாக டாப் X-Pro மாடலில் எலெகட்ரானிக் டிஃபெரன்ஷியல் லாக் உள்ளது.
பேலோடு 1,017-1,195 கிலோ (2,242-2,635 பவுண்டுகள்) வரை உள்ள டாஸ்மேனின் மூலம் 3,500 கிலோ (7,716 பவுண்டுகள்) வரை இழுக்கும் திறன் கொண்டது. கியா டாஸ்மானின் 1,173-லிட்டர் சுமை தாங்கும் திறனை பெற்ற கார்கோ பெட் உள்ளது.
முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள முன்புற பம்பர் அமைப்புடன் மிக நேர்த்தியான செங்குத்து கிரில்கள் அமைந்துள்ளது. சிங்கிள் கேபின் மற்றும் டபூள் கேபின் என இரு விதமான கேபினை பெற்றுள்ளது. இன்டீரியரில் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 12.3 அங்குல கிளஸ்ட்டரும் உள்ளது. கியா டாஸ்மேன் பிக்கப் டிரக் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் தற்பொழுது இல்லை.